செவ்வாய், 17 ஏப்ரல், 2012
திங்கள், 16 ஏப்ரல், 2012
பாபாஜியின் கிரியா யோகம் என்றால் என்ன?
மகிழ்ச்சி, அமைதி, அன்பு மற்றும் ஞானம் ஆகியவையே நமது வாழ்க்கையின் இலட்சியங்களாகும். நாம் முழுமையடைய வேண்டும் என்னும் அவா இறைவனின் பிரதியான நமது சுயத்தில் இருந்து எழுகின்றது. இது மனிதர்களின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.
பாபாஜியின் கிரியா யோகமானது கடவுள் எனும் மெய்யறிவுடன் ஒருமித்து ஆன்மானுபவம் பெறுவதற்கான ஒரு விஞ்ஞானபூர்வமான கலையாகும். பண்டைய பதினெண் சித்தர் மரபில் கற்பிக்கப்பட்ட யோக முறைகளைத் தொகுத்து அவற்றிலிருந்து கிரியா யோகத்திற்கு உயிரூட்டினார் இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளாகப் பிரித்து உட்கொண்டுள்ளது. கிரியா குண்டலிணி பிராணாயாமப் பயிற்சியின் மூலம் மனிதர்களுக்குள் இறையுணர்வானது நிலைபெறுவது இயற்கையாகவே துரிதமடைகின்றது என்று பரமஹம்ச யோகானந்தர் குறிப்பிடுகிறார்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
